ஆண்டாள் – இலக்கணம்

ஆண்டாள் தமிழில் மிகுந்த புலமை பெற்றவர். திருப்பாவையின் யாப்பு கடினமானது இயற்றரவிணை கொச்சகக் கலிப்பா என்று அதை வகைபடுத்திகிறார்கள். திருப்பாவைப் பாடல்களைச் சீர் தளை பிரித்துப் பார்க்கும் போது வெண்சீர் இயற்சீர் வெண்தளைகள் தடுமாற்றமின்றி அமைகின்றன. ஓரிரு இடங்களில்தான் பிறழ்கின்றன. (உம்: நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய). எட்டு நான்கு சீர் அடிகளிலும் எதுகை (எதுகை என்பது மார், நீர், சீர், கூர், ஏர், கார், நார், பார் போன்ற சந்தத்தோடு ஒத்திசையும் ஆரம்ப வார்தைகள்) அமைந்த கடுமையான யாப்பு. 

டாக்டர் பெ.சீனிவாசன், “வைணவ இலக்கிய வகைகள்” என்கிற நூலில் இதை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். ரேவதி பதிப்பகம், திருவாய்மொழித் தெரு, செந்தமிழ் நகர், சிவகங்கை 623560. (நிஜமாகவே இது தான் விலாசம்). கடுமையான யாப்பில் மிக எளிய பாடல்கள் அமைக்கும் திறமை, ஓர் அறியாத பேதைப் பெண்ணிடமிருந்தது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது. இன்று திருப்பாவையின் யாப்பமைதியில் பாடல் ஒன்றை நம் சிறந்த கவிஞர்கள் எழுதினால் கூட அத்தனை எளிமையாக-அத்தனை அழகாக-அமைப்பது கடினம். மேலும், ஆண்டாளின் ‘நாச்சியார் திருமொழி’யில் அறுசீர், எழுசீர், ஆசிரிய விருத்தங்கள், கலி விருத்தங்கள், கலிநிலைத் துறை என்று வரிக்கு வரி எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் ஒற்று நீங்க ஓரே எண்ணிக்கை வரும். இதை அளவியல் சந்தம் என்பார்கள். 

இவைகளையெல்லாம் சரளமாகப் பயன்படுத்தும் ஆண்டாள், தன் தந்தையிடமிருந்து தமிழ்ப்புலமை கற்றிருக்கலாம் என்று எண்ண இடம் உள்ளது. 

பெரியாழ்வார் பாடல்களின் சாயல்,நாச்சியார் திருமொழியில் இருக்கிறது.
– சுஜாதா

An extract from the book ஆழ்வார்கள்- ஓர் எளிய அறிமுகம். 

Photo: Artist Kesav – Krishna for today.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: